;
Athirady Tamil News

பிரேசிலை உலுக்கிய கோர விபத்து ; 11 பேர் பரிதாப பலி

0

பிரேசிலில் லொறி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.

லொறியில் இருந்த மண் பஸ் மீது கொட்டியதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை பொலிஸார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.