ஒரே நாளில் உலகின் கவனத்தை ஈர்த்த வெனிசுலா ; புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார்.
நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், இந்த திடீர் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.
வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கடந்த சில நிமிடங்களாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் உரையாடி வருகிறார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டெல்சி ரோட்ரிக்ஸ், “வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி மதுரோ தான். நாட்டைப் பாதுகாக்க வெனிசுலா தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.