;
Athirady Tamil News

சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

0

கைது செய்யப்பட்ட சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்பில், இந்திக ரத்னமலால நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்ணான்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.