தமிழக எல்லையில் கன்னியாகுமரி ரெயில் மோதி யானை பலி- குட்டி படுகாயம்..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வயலார் வனபகுதி வழியாக சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடும் என்பதால் ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படும். என்றாலும் அவ்வப்போது வனவிலங்குகள் ரெயிலில் அடிப்பட்டு பலியாவது உண்டு.
அந்த வகையில் நேற்று காலை இந்த வழியாக சென்ற கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் மோதி ஒரு யானை பலியானதாக ரெயிலின் கார்டு தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வயலார் கோட்டமுட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறினார். உடனே ரெயில்வே அதிகாரிகளும், வனத்துறையினரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சுமார் 20 வயதான யானை ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தது. அதன் அருகே யானை குட்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. குட்டியை வனத்துறையினர் மீட்டு கால்நடை துறை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.