;
Athirady Tamil News

வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகள்! நடவடிக்கை இல்லை மக்கள் விசனம்!! (படங்கள்)

0

வவுனியா ஓமந்தை பிரதான ஏ9 கண்டி வீதியில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆபத்தான பயணத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்து கால்நடைகளைப் பராமனிப்பாளர்கள் கவனம் எடுக்கவேண்டும் அல்லது பொலிசார் கால்நடைகள் பராமரிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழையுடன் காலநிலை காரணமாக கட்டாக்காலி கால் நடைகள் வீதிகளில் நின்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் இதனால் விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடிவதில்லை எனவே கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை கட்டிவைத்துப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொலிசார் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.