;
Athirady Tamil News

கிழக்கில் மின்சார தடை ஏற்படும்; மக்களுக்கு முன்னறிவிப்பு!

0

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

குறைந்த காற்றழுத்த தாழமுக்கத்தால் கிழக்கின் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அரசாங்க அதிபர் அறிக்கை
இந்நிலையில் சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று (08)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனவே, மின்தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்பதால் மக்கள் அதற்குத் தேவையான விதத்தில் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் , வானிலை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.