;
Athirady Tamil News

தாகம் தீர்க்கும் வௌ்ளரிக்காய் !! (மருத்துவம்)

0

நீர்சத்துள்ள காய்கள் அனைத்துமே உடல் நலனுக்கு நன்மை பயக்கும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணமுடையது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது.

​* வௌ்ளரிக்காயில் மிக குறைவான கலோரி அளவே காணப்படுவதுடன், உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது.

* நீர் அருந்துவதற்கு நேரம் கிடைக்காமல் இருந்தால், வௌ்ளரிக்காய் சாப்பிடலாம். இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுவதனால், இது நீர் அருந்தாமையை ஈடுசெய்யக்கூடியதாகும்.

* வௌ்ளரிக்காயை உண்பதனால் உடலில் ஏற்படும் உடல் உஷ்ணத்திற்கு நிவாரணமளிப்பதுடன், வௌ்ளரிக்காய்ச் சாற்றை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து நமது சர்மத்தை பாதுகாக்கும் தன்மையுடையது.

* வௌ்ளரிக்காயில் உள்ள நீர்சத்து, உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகின்றது. வௌ்ளரிக்காயை அதிகளவில் எமது உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரைய வைக்கும் தன்மைக் கொண்டது.

* வௌ்ளரிக்காயில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான பல விற்றமின்கள் அடங்கியுள்ளமையினால், வௌ்ளரிக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன், எமது ஆற்றல் திறனையும் ஊக்குவிக்கும் விற்றமின் “ஏ,பி,சி” என்பன இதில் அதிகம் அடங்கியுள்ளது.

​* வௌ்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும். தோலில் தான் விற்றமின் “சி” அதிகமாக காணப்படுகின்றது.

* வௌ்ளரிக்காயில் நீர் அதிகமாகவும் கலோரி குறைவாகவும் இருப்பதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர்க்கு சிறந்த உணவாகும். இதனை சூப் அல்லது செலட்களில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

​* இன்சுலின் சுரப்பதற்கு கணையத்தில் உள்ள அணுக்களுக்குத் தேவையான ஹோர்மோன் வௌ்ளரிக்காய்ச் சாற்றிலுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவுவதுடன், தீவிரமான மலச்சிக்கல் குணமடையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.