;
Athirady Tamil News

யாழில் பரபரப்பு சம்பவம் ; கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (1.1.2026) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 40 வயதுடைய தவனேசன் என்பவர் என்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவின் கணவர் என்றும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் வீட்டுக்கு முன்னாள் நின்று ஒருவர் மது போதையில் கூச்சலிட்டுள்ளார்.

அந்த சமயத்தில், மது போதையில் கூச்சலிட்டவர் வெளியேறி விட்டார் எனக் கருதி, மருதங்கேணி பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பொழுது, உயிரிழந்த நபர் வழிமறித்து கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும், கத்திக்குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.