சிங்கள ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள்: தையிட்டி விகாரை பற்றி வலிகாமம் வடக்கு சபை தரும் தெளிவு
தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் சிங்கள மொழியில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்று(31) நடைபெற்றபோதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது.
தையிட்டி விகாரை காணி வரைபடங்களை தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தையிட்டி விகாரையை உடைக்கப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தவறான தகவல்களை சிங்கள ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதாக சபை அமர்வில் குற்றஞ்சாட்டப்பட்டது.