;
Athirady Tamil News

இலங்கையில் இலட்சக் கணக்கானோர் ​எதிர்கொள்ளப்​போகும் நோய் !! (மருத்துவம்)

0

இலங்கை மக்கள் தொகையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், வயது முதிர்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின், வாதநோயியலுக்கும் புனருத்தாபனத்துக்குமான பிரிவு அறிவித்துள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாத நோய்களின் தாக்கம் இருக்கும் என வாதநோயியலுக்கும் புனருத்தாபனத்துக்குமான பிரிவின் வைத்தியர், கலீல் கஸிம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் சனத்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த தொகை 2030 ஆம் ஆண்டில், 22 சதவீதமாக அதிகரிக்கும். ஆகவே 2030 ஆண்டில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வயது முதிர்ந்தவர்கள், வாத நோய்களால் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.