;
Athirady Tamil News

சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி… தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்வு!!

0

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்: 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு வரப்படும் நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4சதவீதமாக இருக்கும் என கணிப்பு சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைப்பு மொபைல் போன், மேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு

தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிப்பு ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் நடப்பாண்டு 6.5 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.