பிரித்தானியாவில் ஜங்க் உணவு விளம்பரங்களுக்கு தடை
பிரித்தானிய அரசு, 2026 ஜனவரி 6 முதல், பகல் நேர ரிவி மற்றும் ஓன்லைன் தளங்களில் ஜங்க் உணவுப் பொருட்களின் (Junk Foods) விளம்பரங்களை முழுமையாக தடை செய்துள்ளது.
குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை மூலம் 20,000 குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
அதேநேரம், வெளிப்புற விளம்பரங்கள் மற்றும் பிராண்டிங் இன்னும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என சில சுகாதார ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், பொது சுகாதாரத்தை முன்னிறுத்துவதே அரசின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, பொது சுகாதாரக் கொள்கைகளில் முக்கிய முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது. குழந்தைகளின் உணவுப் பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஜங்க் உணவின் கவர்ச்சியை குறைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.