;
Athirady Tamil News

முகப்பொலிவை எளிதான வழிகளில் பெறலாம்!! (மருத்துவம்)

0

பசும்பால், பாசிப்பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும்.

* பாசிப்பயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால், வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும். முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவுவதால் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும்.

* வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.

* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற்றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.

* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் பூசி வந்தால், சொர சொரப்பான வரண்ட சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.

பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசிவந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.

* கடலைமாவு, தக்காளி, வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து முகத்தில் கை கால்களில் தடவி 15 நிமிடம் சென்று குளிப்பதால் முகம் உடல் பளபளப்பாகும்.

* பச்சரிசி, வெட்டிவேர், எலுமிச்சை தோல், அருகம்புல், துளசி (காயவைத்து), பச்சைபயறு, கஸ்துாரி மஞ்சள், கடலை பருப்பு சேர்த்து அரைத்து குளியல் பவுடராக உபயோகிக்க உடல் பளபளப்பாகும் வேர்க்குரு, அரிப்பு சரியாகும்.

* வில்வ பழம் சதை சிறிது, எலுமிச்சை சாறு 4 சொட்டு, தேன் கலந்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் தடவுவதால் பருக்கள் உதிர்ந்து வடு தெரியாமல் சரியாகும். கருமை போய்விடும்.

* ஆரஞ்சு பழத்தோல் பசையோடு தேன், தயிர் கலந்து முகத்தில் 15 நிமிடம் தடவி குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளப்பாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.