;
Athirady Tamil News

தைவானை நோக்கி 25 போர் விமானங்கள்-3 போர் கப்பல்களை அனுப்பிய சீனா!!

0

உள்நாட்டு போருக்கு பின் கடந்த 1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவ்வப்போது சீனா, தைவான் எல்லைக்குள் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தி வருகிறது.

மேலும் தைவான் மீது படையெடுக்க போவதாக சீனா மிரட்டல் விடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இரு நாட்டு எல்லையில் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது. இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று தைவானை நோக்கி 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பி உள்ளதாக தைவான் கூறி உள்ளது. இது தொடர்பாக தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த 24 மணி நேரத்திற்குள் சீனா ராணுவத்துக்கு சொந்தமான 25 போர் விமானங்கள் தைவான் வான்வெளி பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளது.

3 போர் கப்பல்களும் தைவானின் கடல்பரப்பில் ஊடுருவி இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானும் எல்லைப்பகுதியில் போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் அனுப்பி உஷார்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சீனா-தைவான் எல்லைப் பகுதியில் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.