;
Athirady Tamil News

மதுபான கொள்கை முறைகேடு: மதுபான தொழில் அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை!!

0

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி இருந்தார். இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேட்டில் பணபரிவர்த்தனை குற்றச்சாட்டில் மதுபான தொழில் அதிபர் அமன்தீப் தாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.