;
Athirady Tamil News

4.770 mg ஐஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது !!

0

காத்தான்குடி கடற்கரை வீதியில் வியாபாரத்துக்கா மோட்டர் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று (06) இரவு மடக்கிபிடித்து கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, அதிரடிப்படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருணஜெய சுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, அதிரடிப்படை அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி. நெத்தசிங்கவின் வழிகாட்டலில், மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி. வெளிட்டவிதான கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.டீ.சி.எஸ். ரத்நாயக்காகவின் அறிவுறித்துக்கமைய பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் காத்தான்குடி கடற்கரை வீதியில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது மோட்டர் சைக்கிள் ஒன்றில் வியாபாரத்துக்காக ஐஸ் போதை பொருளை எடுத்துக் கொண்டு வந்து வியாபாரியை விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன் ஐஸ் போதை பொருளையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரையும் ஐஸ் போதைபொருள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.