;
Athirady Tamil News

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!

0

ஹரியாணாவில் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் குடும்பத்தினருடன் குருகிராமில் உள்ள செக்டார் 57- பகுதியில் வசித்துவந்தார்.

25 வயதான ராதிகா யாதவ், இஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இது தொடர்பாக ராதிகாவுக்கும் அவரது தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான வாக்கு வாதம் மோதலாக முற்றிய நிலையில், ராதிகா யாதவின் தந்தை தனது கைத்துப்பாக்கியை எடுத்து ராதிகாவை சரமாரியாக மூன்று முறை சுட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த ராதிகாவை மீட்ட அவரது உறவினர்கள், ஆபத்தான நிலையில் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது. குற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றிருந்தார். மேலும் ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வந்தார். இரட்டையர் டென்னிஸ் வீராங்கனையாக ராதிகாவின் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில் 113 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.