சுகாதார ஊழியர்களை பாராட்ட பணிப்புரை !!

வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் புதன்கிழமையன்று (15) கடமைக்கு சமூகமளித்த வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு விசேட பாராட்டுகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார ஊழியர்களுக்கு விசேட சேவைப் பாராட்டுக்களை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அவர்களுக்கு தொழில்சார் மட்டத்திலான பாராட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார செயலாளருக்கு அமைச்சர் பணித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரி கொள்கை, வங்கி வட்டி வீதத்தை குறைத்தல், வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல், மின்சார கட்டணத்தை குறைத்தல் ஆகிய கோரிக்களை முன்வைத்து புதன்கிழமை வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையைச் சேர்ந்தோரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற காரணத்தால் வைத்தியசாலைகளுக்கு சென்ற நேயாளிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.