;
Athirady Tamil News

கண்புரை நோயும் அதற்கான தீர்வுகளும்!! (மருத்துவம்)

0

முன்னர், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்கும்கூட ஏற்படுகிறது.

கண்புரை (Cataract) என்றால் என்ன?

மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும், கண்களால் காண வேண்டும் என்றால், கருவிழிக்குப் பின்னாலுள்ள லென்ஸ் மூலம் தான் பார்க்க முடியும். அந்த லென்சில், ஒரு வெண்மையான தோற் படலம் பரவி, பார்வையை மறைத்து, நாளடைவில் ஒரு வெண்படலமாக மாறிவிடுகிறது. இதுதான் கண்புரை எனப்படுகிறது. இதைக் கிராமங்களில் ‘கண்ணில் பூ விழுந்து விட்டது’ என்று கூறுகிறார்கள்.

முன்னர், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இந்தக் கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்குக்கூட ஏற்படுகிறது.

குழந்தைப் பருவத்தில் அதிளவு தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் பார்ப்பது போன்ற காரணங்களாலும், தற்கால உணவுப் பழக்கங்களாலும், கண்புரை நோய், குழந்தைகளையும் தாக்கத் தொடங்கி விட்டன.
நீரிழிவு நோய், குருதிஅமுக்கம் உள்ளவர்களுக்கு, கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது.
கண்புரை நோய் வந்துவிட்டது என்றவுடன், மூக்குக் கண்ணாடி அணிந்தால் போதும், சொட்டு மருந்து விட்டால் போதும் என்று நினைத்தால், அது தவறான எண்ணமாகும்.

அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே, கண்புரையை அகற்ற முடியும். அறுவைச் சிகிச்சைதான் நிரந்தரத் தீர்வாகும்.
கண்புரை ஏற்பட்டவுடன், உரிய கண் மருத்துவரை அணுக வேண்டும். அவரின் ஆலோசனைப்படி, கண்புரை தொடக்க நிலையில் இருந்தால், ‘பேக்கோ’ முறையில் கண்புரையை அகற்றிவிடலாம்.

கண்புரையை வளரவிடுவது நல்லதல்ல. கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மறுநாளே அனைத்து வேலைகளையும் செய்யலாம். கண்களை மறைக்கும் பச்சைக்கலர் துணி தேவையில்லை. கறுப்புக்கண்ணாடி மட்டும் ஐந்து நாள்கள் அணிந்தால் போதும். சொட்டு மருந்தை 30 நாள்களுக்கு கண்களில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.