;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் 2023 ம் ஆண்டுக்கான
மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அண்மையில் சூழகம் அமைப்பின் பிரதான அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது .

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கலந்துகொண்டதோடு
சிறப்பு விருந்தினர்களாக வேலணை கோட்ட கல்விப்பணிப்பாளர் கே.சசிதரன் , இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் கனகரத்தினம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் , பொது சுகாதார பரிசோதகர் அபிராஜ் , பிரபல வர்த்தகர் ச.கோணேஸ்வரன் , சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.