;
Athirady Tamil News

Grok மீது உலக நாடுகள் குற்றச்சாட்டு ; எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

தனது ‘எக்ஸ்’ (X) தளத்தின் Grok செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஊடாக சிறுவர்களின் தவறான படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை ஈலான் மஸ்க் மறுத்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் Grok ஈடுபடுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மஸ்க், Grok தானாக எவ்விதப் படங்களையும் உருவாக்குவதில்லை என்றும், பயனர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே அது செயற்படுவதாகவும் தெரிவித்தார்

எந்நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் Grok வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சில நேரங்களில் ஹேக்கர்கள் வேண்டுமென்றே பிழையான வழிகளில் Grokஐத் தூண்டும்போது எதிர்பாராத முடிவுகள் கிடைக்கலாம் என்றும், அவ்வாறான குறைபாடுகள் உடனடியாகச் சரிசெய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Grok மூலம் தவறான படங்கள் மற்றும் சிறுவர்களின் பாலியல் ரீதியான சித்திரங்கள் உருவாக்கப்படுவதாகப் பல நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

சில நாடுகள் இந்தச் செயலியைத் தடை செய்யவும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புக் கவலைகளைத் தொடர்ந்து, Grok-இன் படங்களை உருவாக்கும் மற்றும் திருத்தும் வசதிகள் (Image-generation and editing) இனி கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என xAI நிறுவனம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.