யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன.
கோ பவனி யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.ஏஸ் வீதியூடாக ஆலயத்தினை சென்றடைந்தது.
