;
Athirady Tamil News

கேரளா படகுவிபத்து எதிரொலி: விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பாதுகாப்பு அதிகரிப்பு !!

0

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த படகு விபத்தின் எதிரொலியாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது.

இங்கு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு ஒன்றில் சுமார் 150 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. சுற்றுலா படகில் செல்லும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் (உயிர் காப்பு மிதவை) கொடுக்கப்பட்டு அதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், விவேகானந்த நினைவு மண்டபத்துக்கு சென்ற பிறகு தான் அதை அகற்ற வேண்டும் எனவும்.

படகில் பயணிக்கும் போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க எழுந்து நிற்க வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு படகில் 150 பேர் மட்டுமே பயணிக்கும் பொருட்டு அதிக சுற்றுலாப் பயணிகள் ஏறாதவாறு கண்காணிப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.