அதிக விலைக்கு அரிசி விற்றவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்றவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Against Sellers Charging Rice Prices
ஜா-எல மற்றும் கந்தானை பகுதிகளைச் சேர்ந்த இந்த வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி ஒரு கிலோ அரிசியை 308, 275 மற்றும் 280 ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.