மின் கட்டணம் குறைக்கப்படுகிறதா?

மின்சார கட்டணத்தை 3% ஆல் குறைப்பதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சி, மின்சாரத் தேவை குறைதல் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்மொழிவை மதிப்பாய்வு செய்து, வரும் வாரங்களில் அதற்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என்பது குறித்து இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.