வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் குத்திக்கொலை
டாக்கா,
வங்காளதேசத்தின் பெனி மாவட்டம் தகன்புயான் நகரை சேர்ந்தவர் ஷோமிர் குமார் தாஸ் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் ஷோமிர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன. வங்காளதேசத்தில் சமீப காலமாக இந்துக்களை குறிவைத்து அதிகளவில் தாக்குதல் நடைபெறுகிறது. அந்தவகையில் அங்கு கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.