யாழில் அதிர்ச்சி: துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயத்தில் மிட்டாய் தயாரிப்பு – 2 நிறுவனங்களுக்கு ரூ. 2.52 லட்சம் தண்டம்!
;
குறித்த மிட்டாய்கள் தொடர்பாக கிடைத்த பகுப்பாய்வு அறிக்கையில் அந்த இனிப்புகளில் துணிகளுக்கு மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்த ரொடமன் டீ எனும் நிறமூட்டி பன்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் குறித்த மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்மந்தப்பட்ட இரு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் 126,000 ரூபா வீதம் 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. மேலும் தண்டத் தொகையினை செலுத்த தவறினால் 18 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.