;
Athirady Tamil News

தெலுங்கானா மாநிலம் உதய தினம் 21 நாட்கள் கொண்டாட்டம்!!

0

தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது. அடுத்த மாதம் 1-ந் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஜூன் 2-ந் தேதி 10-ம் ஆண்டு பிறக்கிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட தெலுங்கானா அரசு முடிவு செய்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தெலுங்கானா மாநிலத்தின் 10-ம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தின் அடிப்படையில் விழா கொண்டாடப்படும். ஜூன் 2-ந் தேதி ஐதராபாத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து, தெலுங்கானா மாநிலம் உருவாக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு முதல்-அமைச்சர் சந்திரசேகரராவ் அஞ்சலி செலுத்தி விழாவை தொடங்கி வைக்கிறார். 21 நாள் கொண்டாட்டத்துக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.