முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ 6000 ஜீவனாம்சம்: பொலிஸிடம் சிக்கிய நபர்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஜீவனாம்சம் கொடுக்க திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர் கன்கையா நாராயண். இவர் கடந்த சில மாதங்களாக நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மனிஷா நகர் பகுதியில் மூதாட்டி ஒருவரின் தங்க சங்கிலியை, இருசக்கர வாகனத்தில் நாராயண் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார் கன்கையா நாராயணை கைது செய்தனர்.
ரூ.6000 ஜீவனாம்சம்
அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.6000 ஜீவனாம்சம் அளிக்க திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார், அவரிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரி அமர்தீப் கிருஷ்ணராவையும் கைது செய்தனர்.