இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் தீப்பரவல் ; மூவர் பலி
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் பயணிகள் கப்பல் ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
சுமார் 150 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, தீப்பரவல் ஏற்பட்ட வேளையில், சுமார் 280 பேர் கப்பலிலிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.