மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது தீவிரமாக நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல்களின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இரண்டு தனி நபர்களுக்கிடையிலான சிக்கல், ஞாயிற்றுக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலின்போது, ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது, பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் பொருட்டு, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிலிருந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அங்கு பொலிஸ் கண்காணிப்பு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.