;
Athirady Tamil News

அமெரிக்காவின் புதிய போர் – திணறப்போகும் ஐரோப்பா!

0

அரசியல் ஆதரவு, ஆயுதங்கள் வழங்குவது, மேற்கத்திய ஆலோசகர்களை அனுப்புவது என்று அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுப் போக்கு உக்ரைன் நாட்டு ஆட்சியாளர்களை ஒரு போர் சாகசத்தை நோக்கிப் பிடித்துத் தள்ளுகிறது.

அமெரிக்க போர்த்தந்திர நிபுணர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை மட்டுமின்றி, ஐரோப்பிய கண்டத்தின் வீழ்ச்சியையும் அவர்களின் இலக்காகக் குறி வைத்துள்ளனர்.

உக்ரைன் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.

அதேசமயம், அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரப் போட்டியாளரான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இருந்து வருவதுடன், அமெரிக்காவிற்கு இந்த யுத்த சூழலானது ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கப்போகிறது.

ரஷ்யாவுடனான அமெரிக்காவின் வர்த்தகம் மிகக் குறைவாகவே உள்ளது.

ஆனால், ரஷ்ய நாட்டுடன் ஐரோப்பிய கண்டம் மிகவும் பரந்துபட்ட, இலாபகரமான வணிகம் மற்றும் பொருளாதார உறவைக் கொண்டுள்ளது.

எனவேதான், ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதல் மூலமாக, ஐரோப்பிய நாடுகளையும் பொருளாதாரத் தடைகளின் ஊடாக மேலும் பாதிப்புகளுக்கு உட்படுத்த அமெரிக்கா முயல்கிறது.

இதன் மூலம் அமெரிக்கா தன்னை பலப்படுத்துவதற்கு சாதகமான சூழல் உருவாகும்.

உக்ரைன் நாட்டைப் பாதுகாப்பது அமெரிக்க சர்வ தேசியவாதிகளின் நோக்கமல்ல.

நார்டுஸ்ட்ரீம் 2 (NordStream 2) இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பை அழித்தொழித்து, விலையுயர்ந்த திரவமாக்கப்பட்ட எரிவாயுவின் மீதான சார்புத்தன்மையை நிலைநாட்டி, இலாபமீட்டுவதே அமெரிக்காவின் பிரதான் நோக்கங்களில் ஒன்று.

இதுவே உக்ரைன் நாட்டை ஒரு போரை நோக்கி தள்ளுவதற்கு அடிப்படையான காரணமும் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.