;
Athirady Tamil News

ரஷ்யா இராணுவத்திற்குல் வெடித்த மோதல்!

0

ரஷ்யா இராணுவத்திற்கும் ரஷ்யாவின் வாடகைப்படையான வாக்னர் படைக்கும் இடையில் அண்மைக்காலமாக மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை வாக்னர் படை சிறைப்பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான 16 மாத கால போர் நடவடிக்கையில், ரஷ்ய இராணுவத்துடன் சேர்ந்து ரஷ்ய வாடகைப்படையான வாக்னர் படையும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றுவதற்கு வாக்னர் படை குழுவின் கருணையற்ற தாக்குதல் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைனில் சண்டையிட்டு வரும் ரஷ்யாவின் நேரடி இராணுவத்திற்கும், வாக்னர் படை குழுவுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பக்முத்-தில் இருந்து வாக்னர் படைகுழு வெளியேறும் வழியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்ததாக வாக்னர் படை குழுவின் தலைவர் பிரிகோஜின்(Prigozhin) குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் பக்முத் இருந்து வெளியேறும் போது வாக்னர் PMC படை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ரஷ்ய இராணுவத்தின் 72வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் வினிவிடின்-ஐ(Vinivitin) வாகனர் படைகுழு சிறைபிடித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவ அதிகாரியிடம் வாக்னர் குழு வீரர்கள் கேள்வி எழுப்புவது போன்ற காணொளிகள் வெளியாகியுள்ளது.

அதில் வாக்னர் படை குழு மீது எதற்காக தாக்குதல் நடத்த உத்தரவிட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த லெப்டினன்ட் கர்னல் வினிவிடின், மதுபோதையில் அவ்வாறு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய அணியில் 10 முதல் 12 வீரர்கள் இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புடின் களமிறக்கிய படைகளின் இடையே தற்போது மோதல் வெடித்து இருப்பது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.