பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை தேவையில்லாமல் வம்புக்கிழுத்த எலான் மஸ்க்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவரது மனைவி அறைந்த விடயம் கேலிப்பொருளாகியுள்ளது.
சமீபத்தில், அமெரிக்க கோடீஸ்வரரும் ட்ரம்பின் நண்பருமான எலான் மஸ்கும், மேக்ரானை அவரது மனைவி அறைந்த விடயத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி, தேவையில்லாமல் மேக்ரானை வம்புக்கிழுத்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஊடகவியலாளர்களை சந்தித்தார் எலான் மஸ்க். அப்போது அவரது கண்ணில் அடிபட்டு கருப்பாகியிருந்ததைக் கவனித்த ஊடகவியலாளர்கள், அது என்ன காயம் என்று கேட்டார்கள்.
🚨REPORTER: "Mr. Musk, what happened to your eye?"
ELON: "Well, I wasn't anywhere near France." 😂💀👏 pic.twitter.com/v7MW1hZYus
— Autism Capital 🧩 (@AutismCapital) May 30, 2025
அதற்கு பதிலளித்த மஸ்க், நான் பிரான்ஸ் அருகில் கூட போகவில்லை என்றார். அதாவது, தான் மேக்ரானின் மனைவியிடம் அடி வாங்கவில்லை என்னும் பொருளில் கேலியாக அப்படிக் கூறினார் மஸ்க்.
பின்னர், தன் ஐந்து வயது மகனிடம், விளையாட்டாக என்னை அடி என்று தான் சொல்ல, அவன் அடித்த அடியில் தன் முகத்தில் அடையாளம் விழுந்துவிட்டது என விளக்கமளித்தார் மஸ்க்.