;
Athirady Tamil News

12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை… பிரகடனத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

0

குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தடை செய்யும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 நாடுகளைச் சேர்ந்த
இந்த பிரகடனம் 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது. வெளியான தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களின் நுழைவு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனசாட்சி
ட்ரம்பின் முதல் ஆட்சியின் போது ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார். ஆனால் பல்வேறு விவாதங்கள் மற்றும் சட்ட போராட்டத்தை அடுத்து 2018 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

2021ல் ஜோ பைடன் ஆட்சியின் போது குறித்த தடை நீக்கப்பட்டது. மட்டுமின்றி, அதை நமது தேசிய மனசாட்சியின் மீது படிந்த ஒரு கறை என்றும் ஜோ பைடன் விமர்சித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.