;
Athirady Tamil News

சச்சின் பைலட் நாளை மறுதினம் தனிக்கட்சி தொடங்குகிறாரா? – மறுப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்!!

0

ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. முதல் மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்ட போதும் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிடத்தின் முழுமையான ஆதரவால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஓரம் கட்டினார். ஒருகட்டத்தில் கொந்தளித்துப்போன சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இப்படி ஒவ்வொரு முறையும் பைலட் கலகக் குரல் எழுப்பும் போதெல்லாம் டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது.

ஆனால் தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிற ஆதங்கம் சச்சின் பைலட் கோஷ்டியிடம் இருந்து வந்தது. இதற்கிடையே, காங்கிரசில் இருந்து சச்சின் பைலட் வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், நாளை மறுதினம் தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.