தேசிய ரீதியில் கொக்குவில் இந்து முதலிடம்
இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டி கொழும்பு பன்னிப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 7 வயதிற்குட்பட்டோருக்கான பெண்களுக்கான போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாம் இடத்தை பெற்றார்.