;
Athirady Tamil News

வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்திய தீவிரவாதிகள்: இஸ்ரேலில் தொடரும் பதற்ற நிலை!

0

இஸ்ரேலில் “வீரர்கள் மற்றும் பொதுமக்கள்” தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அந்நாட்டு பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை இராணுவம் உறுதிப்படுத்தவில்லை.

இஸ்ரேல் – தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது.

வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது.

திடீர் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.

22 இடங்களில் தங்கள் துருப்புக்கள் சண்டையிடுவதை உறுதிப்படுத்தியது இஸ்ரேல் தற்காப்புப் படை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.