;
Athirady Tamil News

மகன் வெளிநாட்டில், யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம் ; சிசிரிவி காட்சியால் காத்திருந்த அதிர்ச்சி

0

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகன் வெளிநாட்டில்
மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அத்துடன் ஊர் மக்களும் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறிருக்க இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என ஊர் மக்கள் சந்தேகித்துவரும் நிலையில் சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மையை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த பெண் தனது வீட்டிலிருந்து இறுதியாக வெளியேறிய சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.