45 ஆண்டுகளுக்கு முன் தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரரை மீண்டும் சந்தித்த நபர்
அமெரிக்காவில் தன்னை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரரை, 45 ஆண்டுகளுக்கு பின்னர் நபர் ஒருவர் சந்தித்த நெகிழ்ச்சி தருணம் பலரையும் கவர்ந்தது.
தீ விபத்தில் சிக்கிய குழந்தைகள்
1978ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி பாஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.
அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்களில் ஜோசப் கில்மோர் (Joseph Gilmore) என்பவர், 3 வயது உமர் ஃபாக்ஸ் மற்றும் அவரது 9 வயது சகோதரி லிசா ஆகியோரைக் காப்பாற்றினார்.
அவர்களை கில்மோர் வெளியே கொண்டு வந்தபோது, பாஸ்டன் குளோப் புகைப்படக் கலைஞரான ஜார்ஜ் ரைஸர் அந்த தருணங்களைப் படம் பிடித்தார்.
அதன் பின்னர் தங்களை காப்பாற்றிய கில்மோரை பல ஆண்டுகளாக ஃபாக்ஸ் தேடியுள்ளது.
45 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
இந்த நிலையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் ஃபாக்ஸ் குடும்பத்தினர் கில்மோரை கண்டுபிடித்ததுடன் Florian Hall-யில் அவரை சந்தித்தனர்.
அப்போது உமர் ஃபாக்ஸ் ”இவர் தான் எங்கள் உயிரைக் காப்பாற்றினார். இல்லையேல் நாம் இருந்திருக்க மாட்டோம். எனக்கு அருமையான குழந்தைகள் உள்ளனர். என் சகோதரிக்கு பெரிய குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வளர்ந்து பெரிய விடயங்களை இப்போது செய்கிறார்கள்” சிலாகித்து கூறினார்.
கில்மோர் அவரிடம் ”கடவுளே! நான் உன்னை இப்போது அழைத்து செல்ல விரும்பவில்லை, நண்பா”, ”எப்படி இருக்கிறீர்கள்? இறுதியாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!” கூறினார்.
அதற்கு ஃபாக்ஸ், ”நீங்கள் என்ன செய்தீர்கள், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றி மாற்றியிருக்கிறீர்கள் மற்றும் உலகிற்கு இன்னும் பலவற்றைக் கொண்டு வந்தீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.