;
Athirady Tamil News

சரோஜா திட்டம் ஊடாக சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு

0

சரோஜா திட்டம் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் இன்று நடைபெற்றது.

அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அம்பாறை பிரிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அம்பாறை உதவி பொலிஸ் மா அதிபர் 1 சம்பத் விக்ரமரத்ன பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன கலந்து கொண்டனர்.

முதலில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து சமய அனுஸ்டானங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது.மேலும் குறித்த நிகழ்வின் நொக்கம் தொடர்பில் அம்பாறை பிரிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி உரையாற்றினார்.தொடர்ந்து மாணவிகளின் நடன நிகழ்வு அரங்கேறியது.

அத்துடன் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல இந்நிகழ்வின் பொலிஸாரின் பங்களிப்பு குறித்து விரிவான உரை ஒன்றினை ஆற்றினார்.தொடர்ந்து சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்வின் பொலிஸாரின் இசைக்குழுவின் பாடல்கள் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.