;
Athirady Tamil News

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

0

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர்கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி.மசூத், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பல்வேறு பிராந்திய சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்தியர்கள் மற்றும் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் நோன்பின் மகத்துவம் குறித்து அஷ்ஷெஹ் என்.ஜீ.அப்துல் கமால் (இஸ்லாஹி) அவர்களினால் விசேட மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வின் நிறைவில், வருகை தந்திருந்த அனைவருக்கும் இப்தார் விருந்து உபசாரமும் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறையினரிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் இவ்வாறான நிகழ்வு வருடா வருடம் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.