;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1705010.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

காலியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

0

காலி(Galle)- குருந்தகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொட்டகொட- குருந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹிச்சிமல்லி என்றழைக்கப்படும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் தகராறு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், போதைப்பொருள் தகராறு காரணமாக வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் மூத்த சகோதரனும் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.