;
Athirady Tamil News

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் கல்முனைக்குடி -03 கிறீன் பீல்ட் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு

0

தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் clean srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வளமான நாடு வளமான கிராமம் என்ற தொனிப்பொருளில் கீழ் தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்கு கீழ் உள்ள கல்முனைக்குடி -03 கிறீன் பீல்ட் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது விருந்தினர் வரவேற்கப்பட்டதுடன் மத அனுஸ்டானம் கிராஅத் ஓதலுடன் ஆரம்பமாகியது.இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமை தாங்கினார்.அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் கீதம் அடங்கிய காணொளி இலத்திரனியல் திரையில் காண்பிக்கப்பட்டது.

மேலும் நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு உரையினை கிராம உத்தியோகத்தர் ஏ.எம். கியாஸ் மேற்கொண்டார்.தொடர்ந்து clean srilanka நிறுவனத்தின் விளம்பரக் காணொளி சபையில் காண்பிக்கப்பட்டது.

அத்துடன் சமூக உற்பத்தித் திறன் தொடர்பாக தலைமையுரையினை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம் அன்சார் உட்பட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் சமூக உற்பத்தி தொடர்பிலான நோக்கம் பற்றிய தெளிவூட்டல் உரையினை மேற்கொண்டார்.

இது தவிர உற்பத்தி திறன் காணொளி அவையோருக்கு காண்பிக்கப்பட்டது.நிகழ்வின் அடுத்ததாக கலாச்சார நிகழ்வு நடைபெற்றது.இதில் ஹஸீதாவினை அல் பஹ்ரியா பாடசாலை மாணவர்கள் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ் உட்பட clean srilanka திட்ட கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ஆர்.எம்.றினாஸ் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.பாஹிஸா எச்.எம் நிஸ்ரியா கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் கிரீன் பீல்ட் கிராமத்தில் அடையாளம் காணப்பட்டவை மற்றும் எதிர்கால சமூக உற்பத்தி திறன் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையை அதிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் திட்ட நிகழ்வின் மாதிரி பெயர் பலகையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.