;
Athirady Tamil News

ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் வழக்கு; நீதிமன்ற உத்தரவு

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத தெரு நாடகத்தை நடத்தி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத தெரு நாடகத்தை நடத்தி சந்தேக நபர்கள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறியே அவர்கள் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.