;
Athirady Tamil News

கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவருக்கு நற்சான்றிதழ் வழங்கி வரவேற்பு

0

வரலாற்றின் முதற் தடவையாக கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட திருமதி ரோஷன் சித்தாரா கான் அசாதிற்கு கத்தார் நாட்டின் மன்னர் நற்சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இச்சான்றிதழை ஜனவரி 27, 2025 அன்று அவர் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார்.

இலங்கையில் வெளியுறவு சேவை அதிகாரியாக 27 ஆண்டுகள் சேவை அனுபவத்தைக் கொண்ட சித்தாரா கான், 1998 ஆம் ஆண்டு வெளியுறவு சேவையில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் உட்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ள அவர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதேவேளை சித்தாரா கான், கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.