;
Athirady Tamil News

நாடுகடத்தலை எதிர்கொண்டவர்… பிரான்சில் வெளிநாட்டவர் ஒருவரின் வெறிச்செயல்

0

பிரான்சில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கண்காணிப்பு பட்டியலில்
தாக்குதலில் ஈடுபட்ட நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தியதையும் அப்பகுதியில் இருந்த நபர்கள் கேட்டுள்ளனர். சனிக்கிழமை மதியம் ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள கிழக்கு நகரமான மல்ஹவுஸில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் குறித்த வெறிச்செயல் நடந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் 37 வயதான அல்ஜீரிய நாட்டவர் என்றும், பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்தவர் என்பதுடன் நாடுகடத்தலை எதிர்கொண்டு வந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சம்பவத்தின் போது அந்த நபர் வீட்டுக் காவல் தொடர்பான நீதித்துறை கட்டுப்பாட்டுப் படிவத்தில் கையெழுத்திட காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

கத்தியால் பொலிசார் மீது
ஆனால் திடீரென்று நீதித்துறை கட்டுப்பாட்டுப் படிவத்தில் கையெழுத்திட மறுத்ததுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிசார் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 4 மணியளவில் அந்த நபர் சம்பவயிடத்திலேயே கைதாகியுள்ளார். கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி கழுத்தில் ஏற்பட்ட காயங்களால் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதலில் மற்றொரு நகராட்சி பொலிசாரும், இரண்டு பார்க்கிங் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

மல்ஹவுஸின் மத்தியில் உள்ள சந்தை சதுக்கத்தில், கடைகளில் மக்கள் நிரம்பியிருந்தபோது, ​​தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

பெர்லினின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் 19 வயது சிரிய அகதி ஒருவரால் ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்து ஒரு நாளுக்குப் பிறகு பிரான்சில் இச்சம்பவம் நடந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.