;
Athirady Tamil News

வாக்குவாதத்தால் மாமாவின் உயிரை பறித்த மருமகன்

0

வரகாபொல எத்னாவல பகுதியில் உறவினர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, 63 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (08) இரவு மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மோதி விபத்துக்குள்ளாகிய போது ஏற்பட்ட வாய்த்தகராறு தீவிரமடைந்து, சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவரான 42 வயது மகன், மற்றொரு சைக்கிள் ஓட்டுநரான 63 வயது மாமாவைத் தாக்கி தள்ளிவிட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை
இதன்போது, குறித்த நபர் தரையில் விழுந்துள்ளதாகவும், இதன் போது அவரது தலை கொங்றீட் தூண் ஒன்றில் மோதியுள்ளது, பின்னர் அந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வருகைதந்த வரகாபொல நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி, சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி, வரகாபொல ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள உடலை, பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வரகாபொல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

42 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.