சாய்ந்தமருது கடலில் மூழ்கிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு
அம்பாறை, கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த படகு கடற்கரை ஓரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத விதமாக இயந்திரம் மற்றும் வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளது.
சாய்ந்தமருதைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான இந்தப் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரம் மற்றும் வலைகள் சேதமடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.