;
Athirady Tamil News

யாழில். டிப்பர் வாகனத்தின் சில்லுகளுக்கு ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்த பொலிஸார்

0

பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர்.

பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை சாவகச்சேரி பொலிஸார் கனகம்புளியடி சந்தி பகுதியில் வழி மறுத்துள்ளனர்.

அதன் போது டிப்பர் வாகனத்தினை நிறுத்தாது , அதன் சாரதி டிப்பர் வாகனத்துடன் தப்பியோடியுள்ளார். அதனை துரத்தி சென்ற பொலிஸார் டிப்பர் வாகன சில்லுகளுக்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர்.

ஆணிகட்டைகள் டிப்பர் சில்லுக்குள் அகப்பட்டமையால் டிப்பர் வாகனத்தின் நான்கு சில்லுகளும் காற்று போன நிலையில் , அதனை மேற்கொண்டு செலுத்த முடியாமல் போனமையால் , டிப்பரை வீதியில் விட்டு விட்டு , சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் பலத்த சிரமங்களின் மத்தியில் டிப்பர் வாகனத்தினை மீட்டு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.